திருத்தணிக்கு காவடிகளுடன் நடைபயணம் சென்ற பொதுமக்கள்


திருத்தணிக்கு காவடிகளுடன் நடைபயணம் சென்ற பொதுமக்கள்
x

போச்சம்பள்ளி அருகே திருத்தணிக்கு காவடிகளுடன் பொதுமக்கள் நடைபயணம் சென்றதால் கிராமம் வெறிச்சோடியது.

கிருஷ்ணகிரி

மத்தூர் :

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தில் 300-க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகையொட்டி சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம், இந்த திருவிழா நடைபெறுவதற்கு முன்னதாக ஒட்டுமொத்த கிராம மக்களும் விரதமிருந்து கையில் மஞ்சள்கொம்பு காப்பு கட்டி விரதமிருந்து நடைபயணமாக திருத்தணிக்கு செல்வார்கள். பின்னர் குள்ளனூர் பாலமுருகன் கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடி கிருத்திகையை முன்னிட்டு கிராம மக்கள் விரதமிருந்து காவடி எடுத்து நடைபயணமாக நேற்று சென்றனர். இவர்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொண்டனர். இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கிராமமே வெறிச்சோடியது. கிராமமக்கள் வீடுகளை பூட்டி சென்றதால் போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story