கிருஷ்ணகிரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே, மேம்பாலம் கட்ட வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story