பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர்களை சீரழிக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன், மாநில துணைத்தலைவர் குருநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story