புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் - குஜராத் மோதிய பரபரப்பான ஆட்டம் 'டிரா'


புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் - குஜராத் மோதிய பரபரப்பான ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 8 Oct 2022 4:40 PM GMT (Updated: 9 Oct 2022 8:45 AM GMT)

ன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர்.இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி வாய்ப்பில் இருந்தது.அனால் கடைசி நேரத்தில் குஜராத் அணியினர் சிறப்பாக விளையாடி புள்ளிகள் எடுத்தால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 31-31 என்ற கணக்கில் இருந்தன.இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.


Next Story