தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருவண்ணாமலை

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் பள்ளி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேட்டு கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட துணை செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில துணை தலைவர் வேலு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.

இ.எம்.ஐ.எஸ். வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டு உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர் சுதாகரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், இயக்க புரவலர் இமானுவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிச்சாண்டி, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story