வருமுன் காப்போம் திட்ட முகாம்


வருமுன் காப்போம் திட்ட முகாம்
x

எஸ்.வாழவந்தியில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் மருத்துவ முகாம் எஸ்.வாழவந்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் செல்வராஜா வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சரவணன், மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் எஸ்.வாழவந்தி சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மக்கள் நல பணியாளர் முருகேசன், சுகாதார நர்சுகள், மருத்துவ துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலப்பட்டி சுகாதார ஆய்வாளர் கோபி நன்றி கூறினார்.


Next Story