பிரசன்ன மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


பிரசன்ன மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x

பிரசன்ன மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம்:

அரிமளம் அருகே ராயவரத்தில் பிரசன்ன மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், யாகசாலை பிரவேசம், விசேஷ சந்தி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூைஜகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 9.10 மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் 9.30 மணிக்கு பிரசன்ன மீனாட்சி சுந்தரேஸ்வரர் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ராயவரம் வெ.மு. குடும்பத்தினர் செய்திருந்தனர்.


Next Story