தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி


தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சியை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சியை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

ஊக்குவிப்பு தொகை

கிராமப்புற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய திறனாய்வு தேர்வு கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் வரை இந்த பயிற்சி அளிக்கப்படும்.

தேசிய திறனாய்வு தேர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க. நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், சமூகவியல் பாடங்கள் மற்றும் பொது அறிவு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் 78 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் அம்பிகா, ஜெயா, மகேஸ்வரி, விஜயலட்சுமி, பாத்திமா ஞானம் ஆகியோர் செயல்பட்டனர்.


Next Story