நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

வலங்கைமான் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் துணை மின் நிலைய அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வலங்கைமான் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் பகுதிகளான வலங்கைமான், விருப்பாட்சிபுரம், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், பாடகச்சேரி, செம்மங்குடி, சின்னகரம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, புளியக்குடி நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென் குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story