குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்


குடியாத்தத்தில்  அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

இந்திய அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து குடியாத்தம் கோட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குடியாத்தம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் தலைமை தபால் நிலையம், ஆம்பூர், பேரணாம்பட்டு, பரதராமி, மாதனூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட 20 துணை அஞ்சலகங்கள், 88 கிளை அஞ்சலகங்களில் 98 சதவீதம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க நிர்வாகி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி, கோபிநாதன், அஞ்சலக ஊழியர் சங்கத்தின் சிவக்குமார், எழில்மாறன், ரவி, பாலதண்டாயுதம், அன்பழகன் உள்ளிட்டோர் வேலை நிறுத்த போராட்டம் குறித்து பேசினர். முடிவில் சங்க நிர்வாகி தினேஷ்குமார் நன்றி கூறினார்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று தபால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story