மக்கள் தொகை தின பேரணி


மக்கள் தொகை தின பேரணி
x
தினத்தந்தி 21 July 2023 8:45 PM GMT (Updated: 21 July 2023 8:45 PM GMT)

மக்கள் தொகை தின பேரணி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நெடுகுளா அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட புள்ளியியல் அலுவலர் ஐஸ்வர்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், வட்டார புள்ளியியல் அலுவலர் வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுகுளாவில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சேலக்கொரை கிராமத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனா். தொடர்ந்து அனைவரும் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். முடிவில் சுகாதார ஆய்வாளர் குமாரசாமி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story