திம்மலை ஊராட்சியில் குளம் வெட்டும் பணி


திம்மலை ஊராட்சியில் குளம் வெட்டும் பணி
x

திம்மலை ஊராட்சியில் குளம் வெட்டும் பணி ஒன்றியக்குழு துணை தலைவர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே திம்மலை ஊராட்சியில் ஏரி புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் குளம் வெட்டுவதற்க்கு பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பணி மேற்பார்வையாளர் சேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆழ்வார், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story