11 பதவி இடங்களுக்கு 28 மையங்களில் வாக்குப்பதிவு


11 பதவி இடங்களுக்கு 28 மையங்களில் வாக்குப்பதிவு
x

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 11 பதவி இடங்களுக்கு 28 மையங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 14,867 பேர் வாக்கு அளிக்கின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 11 பதவி இடங்களுக்கு 28 மையங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 14,867 பேர் வாக்கு அளிக்கின்றனர்.

வாக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 25 பதவியிடங்கள் காலியாக இருந்த நிலையில் அவற்றிற்கு கடந்த ஜூன் 20 முதல் 27 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையில் 14 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 11 பதவி இடங்களுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

28 வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நுண்பார்வையாளர்கள்

தேர்தலில் 7,202 ஆண் வாக்காளர்களும், 7,664 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும் ஆக மொத்தம் 14,867 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 28 வாக்குச்சாவடி மையங்களில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் மத்திய அரசு வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மடக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது விடுமுறை

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களை அடையாளமாக காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 9 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பறைகளில் வாக்கு பதிவு முடிந்தவுடன் இருப்பு வைக்கப்படும்.

வருகிற 12-ந் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.


Next Story