இரட்டைக்கொலை வழக்கில் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் விசாரணை


இரட்டைக்கொலை வழக்கில் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் விசாரணை
x

பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

இரட்டைக்கொலை

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54), என்ஜினீயர். கடந்த 23-ந் தேதி இரவு பழனியப்பன் மற்றும் அவரது தாயார் சிகப்பி (75) ஆகியோரை மர்ம ஆசாமிகள் உருட்டுக்கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர். மேலும் அவர்களது வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

செல்போன், சாவி

இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனியப்பனின் பூர்வீக வீட்டில் உள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணற்றில் ஒரு பழைய சாவியும், ஒரு செல்போனும் கிடந்தது. மேலும் அதை வைத்து விசாரணை செய்ததில் உபயோகமற்ற செல்போனும், உபயமற்ற சாவியும் கிடந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த சில வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செல்போன் சிக்னல் மூலம் விசாரணை

இதற்கிடையில் செல்போன் சிக்னல் மூலமாக குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்து வருகின்றனர்.


Next Story