மொடக்குறிச்சியில் தி.மு.க.-பா.ஜ.க.வினர் மோதல்: பேரூராட்சி தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்கு


மொடக்குறிச்சியில் தி.மு.க.-பா.ஜ.க.வினர் மோதல்: பேரூராட்சி தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்கு
x

மொடக்குறிச்சியில் தி.மு.க.-பா.ஜ.க.வினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சியில் தி.மு.க.-பா.ஜ.க.வினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோதல்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க.கவுன்சிலர்கள் 10 பேரும், பா.ஜ.க. கவுன்சிலர்கள் 2 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பேரூராட்சியில் நிதி முறைகேடு நடப்பதாக பா.ஜ.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி சிவசங்கர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தனி தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் தி.மு.க.வை சேர்ந்த மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் (வயது 47), மொடக்குறிச்சி பேரூர் கிளை செயலாளர் சரவணன் (56), பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பகவதி நகரை சேர்ந்த மகன்யா (26), 6-வது வார்டு கவுன்சிலர் பிரதீபா (37), 12-வது வார்டு கவுன்சிலர் ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (36), 15-வது வார்டு கவுன்சிலர் வேலம்பாளையம் புதூரை சேர்ந்த கன்னுச்சாமி (65), 4-வது வார்டு கவுன்சிலர் பஞ்சலிங்கபுரம் தனலட்சுமி (45), தி.மு.க. நிர்வாகி அண்ணமார் நகர் தமிழரசு (36) ஆகிய 8 பேர் மீது கொலை முயற்சி மற்றும் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பா.ஜ.க. நிர்வாகிகள் சிவசங்கர் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் சத்யா தேவி ஆகிய 2 பேர் மீதும் சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story