சங்கரன்கோவில் அருகே, மர்ம சாவில் துப்பு துலங்கியது:பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி கொலை-2 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்


சங்கரன்கோவில் அருகே, மர்ம சாவில் துப்பு துலங்கியது:பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி கொலை-2 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:46 PM GMT)

சங்கரன்கோவில் அருகே பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி மர்மான முறையில் இறந்து கிடந்த வழக்கில் துப்பு துலங்கியது. அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி மர்மான முறையில் இறந்து கிடந்த வழக்கில் துப்பு துலங்கியது. அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகளிர் அணி நிர்வாகி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவருடைய மகள் மாரியம்மாள் (44). இவர் குருவிகுளம் யூனியனில் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக பொறுப்பு வகித்து வந்தார்.

சம்பவத்தன்று இலவன்குளம் அருகே ெரயில்வே தண்டவாளம் பக்கத்தில் பிணமாக கிடந்தார். சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாய் சண்முகத்தாய் போலீசில் புகார் அளித்தார்.

கொலை

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரியம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி காலனி தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் முத்துக்காலாடி (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

விஷம் வைத்து கொல்ல முயற்சி

மாரியம்மாளுக்கும், முத்துக்காலாடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரியம்மாள் இன்னொரு நபருடன் பழகி வந்ததை முத்துக்காலாடி கண்டித்துள்ளார். இதனால் முத்துக்காலாடியை சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல மாரியம்மாள் முயற்சி செய்துள்ளார். எனவே முத்துக்காலாடி, மாரியம்மாளை நைசாக பேசி புளியம்பட்டிக்கு வரவழைத்துள்ளார். அங்கு நடந்த வாக்குவாதத்தில் மாரியம்மாளை தாக்கியதால் அவர் இறந்தார்.

அதன்பின்னர் தனது நண்பர் தாருகாபுரத்தைச் சேர்ந்த சிலந்தையார் மகன் சுப்பையா பாண்டியன் (58) என்பவருடன் சேர்ந்து மாரியம்மாள் உடலை ெரயில்வே தண்டவாளம் அருகில் கொண்டு சென்று வீசி விட்டு சென்று விட்டனர்.

இந்த தகவலை முத்துக்காலாடி தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து சுப்பையா பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் கூலி தொழிலாளிகள் ஆவர்.

அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story