பா.ம.க., வன்னியர் சங்க செயற்குழு கூட்டம்


பா.ம.க., வன்னியர் சங்க செயற்குழு கூட்டம்
x

ஆற்காட்டில் பா.ம.க., வன்னியர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நகர செயற்குழு கூட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் துளசி ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லட்சுமணன், சுரேந்தர், அஜய்ராஜ், ராமு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் சஞ்சீவிராயன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எம்.கே. முரளி, மாவட்ட தலைவர் கே.எஸ்.ஆறுமுகம், பசுமைத்தாயகம் மாநிலத் துணை செயலாளர் டி.டி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஆற்காடு நகரின் மையப் பகுதியில் ஆரணி செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்துவது, மே 5-ந் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு விழாவில் ஆற்காடு நகரம் சார்பில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது. ஆற்காடு நகருக்கு வெளியில் குப்பைகள் மறுசுழற்சி மையம் அமைத்து அனைத்து வாரடுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த வார்டில் தரம் பிரித்தலை கைவிட்டு, மறுசுழற்சி மையத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆற்காடு நகரில் 13-வது வார்டு கங்கை அம்மன் கோவில் பக்கத்தில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர மாணவர் சங்கத் தலைவர் ராகவ் நன்றி கூறினார்.


Next Story