கல்வி சுற்றுலா சென்ற பிளஸ்-1 மாணவ-மாணவிகள்


கல்வி சுற்றுலா சென்ற பிளஸ்-1 மாணவ-மாணவிகள்
x

கல்வி சுற்றுலாவுக்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகள் ஊட்டி சென்றனர்.

அரியலூர்

அரியலூர்:

சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "கோடை கொண்டாட்டமானது" கோடை விடுமுறையில் பிளஸ்-1 வகுப்பு முடித்து பிளஸ்-2 வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி மாநில அளவில் முதன் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கல்வி சுற்றுலா மற்றும் சிறப்பு முகாம் ஊட்டியில் நேற்று முதல் வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நடத்த தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மாநில அளவில் 20 மாவட்டங்களில் இருந்து 2021-22-ம் கல்வியாண்டிற்கு கல்வியில் சிறப்பாக திகழ்ந்த 1,585 மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்வி சுற்றுலா செல்வதற்கு அரியலூர் மாவட்டத்தில் 40 மாணவர்கள், 41 மாணவிகள் என மொத்தம் 81 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த மாவட்ட பகுதிகளில் இருந்து கல்வி சுற்றுலாவில் கலந்து கொள்வதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சொகுசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.


Next Story