பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது


பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது
x

பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது.

அரியலூர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 33 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 44 தேர்வு மையங்களிலும் தமிழ் தேர்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 80 பள்ளிகளை சேர்ந்த 3,701 மாணவர்களும், 3,595 மாணவிகளும் என மொத்தம் 7,296 பேர் பிளஸ்-1 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் தேர்வில் 7,193 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 68 மாணவர்களும், 35 மாணவிகளும் என மொத்தம் 103 பேர் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களாக தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 27 ஆண்களும், 19 பெண்களும் என மொத்தம் 46 பேரில், 42 பேர் தோ்வு எழுதினர். தலா 2 ஆண்கள், பெண்கள் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளை சேர்ந்த 4,326 மாணவர்களும், 4,566 மாணவிகளும் என மொத்தம் 8,892 பேர் பிளஸ்-1 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் தேர்வில் 8,398 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 319 மாணவர்களும், 175 மாணவிகளும் என மொத்தம் 494 பேர் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 37 ஆண்களும், 48 பெண்களும் என மொத்தம் 85 பேரில், 68 பேர் தோ்வு எழுதினர். 8 ஆண்களும், 9 பெண்களும் என மொத்தம் 17 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது. தேர்வினை அறை கண்காணிப்பாளரும், பறக்கும் படையினரும் கண்காணித்தனர். மாவட்டங்களில் பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வில் தமிழ் தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக யாரும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2-க்கு இன்று (புதன்கிழமை) ஆங்கில தேர்வு நடக்கிறது. பிளஸ்-1-க்கு அடுத்து ஆங்கில தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.


Next Story