பிளாஞ்சேரி சிம்ஹாருடவராகி அம்மனுக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்


பிளாஞ்சேரி சிம்ஹாருடவராகி அம்மனுக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 22 Jun 2023 7:38 PM GMT (Updated: 23 Jun 2023 10:22 AM GMT)

பிளாஞ்சேரி சிம்ஹாருடவராகி அம்மனுக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரியையொட்டி நேற்று காலை சிம்ஹாருட வராகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராகி அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story