இன்றும், நாளையும் மின் தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்துதல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) எட்டயபுரம் உப மின் நிலையத்தின் லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, சென்னயம் பட்டி, காட்டு ராமன் பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல எப்போதும் வென்றான் உப மின் நிலையத்தின் கீழ செய்தலை, மேல செய்தல் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நாளை (புதன்கிழமை) கோவில்பட்டி உப மின் நிலையத்தின் வெங்கடேஷ் நகர் பகுதிகள், கதிரேசன் கோவில் பிரதான சாலையில் ஆர்த்தி மஹால் முதல் யூனியன் கிளப் வரை உள்ள பகுதிகள், மற்றும் ரீஜென்ட் டெக்ஸ்டைல் அருகில் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.