நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 23 Aug 2022 7:30 PM GMT (Updated: 23 Aug 2022 7:30 PM GMT)

காரிமங்கலம், இருமத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி

காரிமங்கலம்:-

காரிமங்கலம், இருமத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காரிமங்கலம்

காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், எச்சணம்பட்டி,

பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டூர், பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, மாட்டலாம்பட்டி, பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி, பண்ணந்தூர், கோவிலூர், நாகரசம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், சப்பாணிப்பட்டி, இருமத்தூர், கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், வகுரப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

இருமத்தூர்

இருமத்தூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், கே.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்டனூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, வி.பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம்பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஆர்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story