மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை


மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை
x

மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி

மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். மாநாட்டில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதியத்தை ரூ.20 ஆயிரத்தில் இருந்துரூ.12 ஆயிரமாக குறைக்கும் அரசாணை 219-ஐ ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வார்டு மேலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20 ஆயிரமாகவும், டயாலிசிஸ் டெக்னீசியன் அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரமாகவும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு ரூ.16 ஆயிரமாகவும் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஈ.பி.எப்.,இ.எஸ்.ஐ., மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story