ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி


ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி
x
தினத்தந்தி 16 Feb 2023 6:45 PM GMT (Updated: 16 Feb 2023 6:45 PM GMT)

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமையில் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் சி.பழனியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

நடப்பு 2022-2023-ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கும் ஊக்கத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வயல்விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் சேதமடைந்த எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை புதுப்பித்து சீரமைக்க வேண்டும். மழைக்காலம் முடிந்துவிட்ட நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை மீண்டும் இலவசமாக விவசாயிகள் அள்ளிச்செல்ல அனுமதி வழங்க வேண்டும். விளைநிலங்களையும், கரும்பு பயிர்களையும் சேதமாக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையின் 9 கோட்டங்களின் அதிகாரிகளுக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப்போல் விழுப்புரம் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, விவசாயிகளின் விவசாய வேலைக்கு அனுப்புவதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story