சதுரகிரி ெசல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி


சதுரகிரி ெசல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
x

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தாணிப்பாறையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர்
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தாணிப்பாறையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஆடி அமாவாைச திருவிழா

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டும் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தாணிப்பாறை விலக்கு வரை இருவழி சாலைகளும், தாணிப்பாறை விலக்கில் இருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வரை வாகனங்கள் வருவதற்கும், மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பி செல்வதற்கும் ஒரு வழி சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தாணிப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அருகிலேயே ஆட்டோ, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு தனித்தனியாக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தங்க அனுமதி இல்லை

பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Related Tags :
Next Story