பெரம்பலூர் நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்


பெரம்பலூர் நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
x

பெரம்பலூர் நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், டோல்கேட் அருகே தாளக்குடியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து காவிரி-கொள்ளிடம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் உள்ள பிரதான நீர் வழங்கும் 3 குடிநீர் கிணறுகளும் நீரில் மூழ்கி உள்ளன. எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு வழங்க வேண்டிய நீர் சரியான அளவில் வந்து சேரவில்லை. இதனால் நகராட்சி பகுதிகளுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகர் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story