திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக சக்கர நாற்காலி கோரி விண்ணப்பம் அளித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு கோரிக்கையினை பரிசீலனை செய்த கலெக்டர் உடனடியாக மாற்றுத்திறனாளி நபருக்கு 3 சக்கர நாற்காலியினை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலன்) செந்தில்குமார், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story