சென்னையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்


சென்னையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்
x

சென்னையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை

தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500/- அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story