ஓய்வூதியர்கள் தர்ணா


ஓய்வூதியர்கள் தர்ணா
x

ஓய்வூதியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உச்சத்தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக மாதந்தோறும் பிடித்தம் செய்யும் பிரீமியத்தொகையாக ரூ.350 மட்டுமே வசூலிக்க வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவரும், ஓய்வுபெற்ற தாசில்தாருமான மகேஸ்வரன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் பரமசிவம் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் ஆளவந்தார், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி உள்பட பலர் பேசினார்கள். இதில் மாவட்ட சங்க நிர்வாகிகள், பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் தாலுகா சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story