அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்

தி.மு.க.-அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாளையொட்டி அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகை

அண்ணா பிறந்த நாளையொட்டி நாகையில் தி.மு.க சார்பில் அவரது சிைலக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். முன்னதாக பப்ளிக்ஆபீஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய பஸ் நிலையம், ஆஸ்பத்திரி சாலை வழியாக சென்று பாரதிமார்க்கெட் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நாகை ஒன்றியம் சார்பில் புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் அ.தி.மு.க சார்பில் நாகை அ.தி.மு.க அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதற்கு அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் தங்ககதிரவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் வடக்கு தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி வடக்காலத்தூரில் உள்ள அண்ணாசிலைக்கு தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் வடக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கீழ்வேளூர் நகர தி.மு.க. சார்பில் நகர துணை செயலாளர் பிரசாத் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட தி.மு.க.வினர் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திட்டச்சேரி

திருமருகல் ஒன்றியத்தில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக திருமருகல் சந்தைப்பேட்டையில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருமருகல் தெற்கு ஒன்றியம் பூதங்குடியில் அண்ணாவின் உருவப் படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கீழையூர்

கீழையூரில் அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி கீழையூர் கருத்தெருவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பாலைசெல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பால்ராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story