உவரி அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து தலைவர் மகன் கைது
உவரி அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து தலைவரின் மகனை போலீசார் கைது செய்தனர்
வள்ளியூர்:
உவரி அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து தலைவரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
மாணவி கர்ப்பம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார்குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சவுந்திரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். வெங்கடேஷ் உவரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
வாலிபர் கைது
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.