பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தது


பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தது
x

15 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டியில் உள்ள ஏரி மாவட்டத்தின் பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 170 ஏக்கர் ஆகும். இந்த ஏரிக்கு கடவூர் மலைப்பகுதிகளில் மழை பெய்தால் அங்கிருந்து மழைநீர் வந்து சேரும். ஏரியில் தண்ணீர் நிரம்பினால் சுமார் 2000 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த ஏரிக்கு கடந்த 2007-ம் ஆண்டு 10 அடி அளவில் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது கடவூர் பகுதியில் பெய்த மழையால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்ததால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். முன்னதாக பஞ்சப்பட்டி ஏரியை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஜோதி, உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story