மகா காளியம்மன் கோவிலில் படி பூஜை


மகா காளியம்மன் கோவிலில் படி பூஜை
x

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் படி பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்


நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது.. இதையொட்டி கோவிலில் 18 படிகளுடன் அய்யப்ப சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அய்யப்ப பக்தர்கள் படி பூஜை செய்து வழிபட்டனர்.. இதில் 100-க்கு மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story