மணல் கடத்தலை தடுக்க 12 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு


மணல் கடத்தலை தடுக்க 12 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
x

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க 12 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மூலம் பாலாற்றில் இருந்து மணல் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்கவும், மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினர், வருவாய்துறையினருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த வாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட இருசக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் மணல் கடத்தலை தடுக்க வருவாய்துறையினர், நீர்பாசனபிரிவு, போலீசார் அடங்கிய 12 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வேலூர் சத்துவாச்சாரி, பள்ளிகொண்டா, திருவலம், காட்பாடி, மேல்பாடி, வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், குடியாத்தம் கிழக்கு-மேற்கு, வளத்தூர், பேரணாம்பட்டு, மேல்பட்டி ஆகிய உள்வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் இரவு வேளைகளில் திடீர் ஆய்வு நடத்தி மணல் கடத்தலை தடுக்கவும், இதில், ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story