மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகுழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவு


மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகுழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவு
x
தினத்தந்தி 2 Sep 2023 7:30 PM GMT (Updated: 2 Sep 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் செயல்பாடு கள் குறித்து விவாதத்தினர்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்த வேண்டும். மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பள்ளி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறும்படம்

மாவட்டம் முழுவதும் 1098 குழந்தை உதவி எண் (சைல்டு ஹெல்ப் லைன்) அனைவரும் அறியும் வண்ணம் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைத்திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து குறும்படம், துண்டு பிரசுரம் தயாரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் இல்லங்களை பதிவு செய்தல் மற்றும் குழந்தை இல்லங்களை கண்காணிப்பு செய்தல் போன்ற பணிகளில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் இளஞ்சிறார் நீதிக்குழும நடுவர் பிரபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, குழந்தை நலக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story