தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்


தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்
x
தினத்தந்தி 18 March 2023 3:09 PM GMT (Updated: 18 March 2023 3:13 PM GMT)

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவித்தது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரேதம் என்றும், தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவித்தது சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.


Next Story