ஆபரேஷன் கந்துவட்டி: ஒரு வாரத்தில் 124 புகார்கள் - காவல்துறை தகவல்


ஆபரேஷன் கந்துவட்டி: ஒரு வாரத்தில் 124 புகார்கள் - காவல்துறை தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2022 7:28 PM IST (Updated: 15 Jun 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின்படி கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டில் போலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 89 புகார் மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7, நாமக்கல்லில் 6, சேலத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேரிடம் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story