ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி வெற்றி


ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 17 Sep 2023 10:45 PM GMT (Updated: 17 Sep 2023 10:45 PM GMT)

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏ டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணியும், கூடலூர் ரைசிங் ஸ்டார் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவரில், 30.2 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் அபூபக்கர் சித்திக் 60 ரன்கள், மார்ஷல் 38 ரன்கள் எடுத்தனர். கூடலூர் ரைசிங் ஸ்டார்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ரகுமான், வைசாக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 210 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி 17.4 ஓவர்களில் வெறும் 86 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த அணி வீரர் வைசாக் 30 ரன்கள் எடுத்தார். ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் நித்தின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஊட்டி லிட்டில் ஸ்டார்ஸ் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Related Tags :
Next Story