ஊட்டி கேலக்சி அணி வெற்றி


ஊட்டி கேலக்சி அணி வெற்றி
x
தினத்தந்தி 30 Jun 2023 9:15 PM GMT (Updated: 30 Jun 2023 9:16 PM GMT)

மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் ஊட்டி கேலக்சி அணி வெற்றி பெற்றது.

நீலகிரி


கோத்தகிரி


நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணியும், ஊட்டி கேலக்சி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேலக்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 29.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ரீகன் டொனால்டு 29 ரன்கள், சதீஷ் 27 ரன்கள் எடுத்தனர். சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணியின் பந்து வீச்சாளர் நிவேஷ்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 210 பந்துகளில் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர் லோகேஸ்வரன் 21 ரன்கள் எடுத்தார். கேலக்சி அணியின் பந்து வீச்சாளர் சதீஷ் சிறப்பாக பந்து வீசி 7 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சூர்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஊட்டி கேலக்சி அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய சதீஷ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.



Related Tags :
Next Story