ஊட்டி டிவிஸ் அணி வெற்றி


ஊட்டி டிவிஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 6:45 PM GMT)

மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் ஊட்டி டிவிஸ் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி, சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் கோத்தகிரி பி.எம்.சி.சி. அணியும், ஊட்டி டிவிஸ் அணியும் மோதியது. போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த டிவிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் மணிகண்டன் 32 ரன்கள் எடுத்தார். பி.எம்.சி.சி. அணியின் பந்து வீச்சாளர் முருகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 210 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கோத்தகிரி பி.எம்.சி.சி. அணி 33 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்த அணி வீரர் மகேஷ் 40 ரன்கள் எடுத்தார். டிவிஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் மணிகண்டன், சத்தியமூர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஊட்டி டிவிஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Related Tags :
Next Story