சேலம் 4 ரோடு பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை


சேலம் 4 ரோடு பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Jun 2023 6:30 PM GMT (Updated: 25 Jun 2023 6:49 AM GMT)

சேலம் 4 ரோடு பகுதியில் முதியவர் பிணம் கிடந்தது யார் அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சேலம்

சேலம் 4 ரோடு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய 2 கால்களிலும் காயத்தழும்பு இருந்தன. கத்தரிப்பூ கலரில் சட்டையும், காவி நிற வேட்டியும் அணிந்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story