த.வெ.க தலைவர் விஜய்க்கு ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து


த.வெ.க தலைவர் விஜய்க்கு ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து
x

கோப்புப்படம்

த. வெ.க. தலைவர் விஜய்க்கு, ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,விஜய்க்கு, ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பொதுப் பணியில் காலூன்றி உள்ள விஜய் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story