பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை


பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த முறையில் பணி செய்யும் எம்.ஆர்.பி. செவிலியர் களை, தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார்.

மாவட்ட இணைசெயலாளர் சகாய டெய்சி வரவேற்று பேசினார். மாநில இணைச்செயலாளர் சுஜாதா தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் நீதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் பிரேமலதா நன்றி கூறினார். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோர்ட்டு உத்தரவின்படி எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முறையான போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்தும் 7 வருடத்திற்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காத்திருப்பு போராட்டம்

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். 2500 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. ஏற்கனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்குவது, முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. வரும் காலங் களிலும், கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story