தகுதியானவர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி


தகுதியானவர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது  அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2022 6:45 PM GMT (Updated: 17 Dec 2022 6:47 PM GMT)

தகுதியானவர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,


தகுதியானவர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று களியக்காவிளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வரி விதிப்பு இருக்காது

தமிழகத்தில் வரி விதிப்பு என்பது கருணாநிதி கூறியது போன்று பூக்களில் இருந்து எப்படி தேனீக்கள் தேன் எடுக்கின்றதோ அதே போன்று தான் தி.மு.க.வின் நிலைப்பாடு இருக்கும். அதனால் எந்த வரி விதிப்பும், திணிப்பும் மக்களிடையே இருக்காது. இது தான் தலைவரின் நிலைப்பாடும் கூட.

நாட்கள் செல்ல, செல்ல இனி விலைவாசி ஏற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு காரணம் பெட்ரோல் விலை ஏற்றம் தான். பெட்ரோலிய பொருட்களின் விலை தான் விலைவாசியை நிர்ணயம் செய்கிறது.

யாரும் தடுக்க முடியாது

பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். தகுதியானவர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. தகுதி இல்லாத ஒரு நபரை திணிப்பது தான் திணிப்பு என்று கூற முடியும்.

எந்த பொறுப்பும் இல்லாதவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்து அதன் பிறகு அவர்களை மக்கள் பிரதிநிதியாக்கிய வரலாறு இந்தியாவில் நடந்துள்ளன. அதை பற்றி பேசாதவர்கள் இன்று புதிதாக பேசுகின்றனர்.

இவ்வாறு கூறினார்.


Next Story