பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் நூதன பணமோசடி


பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் நூதன பணமோசடி
x

ஆன்லைனில் பொருட்கள் வாங்கிய நிலையில் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.97 ஆயிரத்து 700 மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ஆன்லைனில் பொருட்கள் வாங்கிய நிலையில் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.97 ஆயிரத்து 700 மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

பரிசுத்ெதாகை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தெளிச்சாத்தநல்லூர் அருகே உள்ள என்.வள்ளியனேந்தலை சேர்ந்தவர் காரிச்சாமி (வயது 34). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பரமக்குடியில் எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் காலணி மற்றும் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை வாங்கி உள்ளார். அந்த பொருட்கள் வந்து சேர்ந்ததும் கடந்த 16-ந் தேதி காரிச்சாமிக்கு பொருட்கள் வாங்கிய நிறுவனத்தின் பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் இருந்த பரிசு கூப்பனை சுரண்டி பார்த்த போது காரிச்சாமிக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை பெற வேண்டும் என்றால் நாங்கள் அனுப்புகின்ற விவரங்களை பூர்த்தி செய்து வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த விவரங்களை படித்து பார்த்த காரிச்சாமி உடனடியாக தனது சுய விவரங்கள் அனைத்தையும் அனுப்பி உள்ளார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர் பரிசுத்தொகை உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை பெற வேண்டும் என்றால் வரியாக ரூ.9 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

விசாரணை

ரூ.9 லட்சம் வருகிறதே என்ற ஆசையில் அந்த பணத்தை அனுப்பிய நிலையில் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்பது போன்ற காரணங்களை கூறி காரிச்சாமியிடம் இருந்து ரூ.97 ஆயிரத்து 700 பெற்றுக்கொண்டனர். இவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் பரிசுத்தொகையை அனுப்பி வைக்காமல் தொடர்ந்து பணம் கேட்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பதாக எண்ணிய காரிச்சாமி அவர்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காரிச்சாமி இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து காரிச்சாமியை ஏமாற்றியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story