நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு


நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு
x

குத்தாலம் அருகே பெருமாள் கோவில் ஊராட்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் பெருமாள் கோவில் ஊராட்சியில் பூம்புகார் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது 108 வைணவ திவ்ய தேசங்களில் 10-வது தலமான ஆமருவி பெருமாள் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறினார். மேலும் தேரழுந்தூர், மேலையூர், தொழுதாலங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளிலும் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் பள்ளிவாசல் குளத்துக்கு ஆழ்துளை கிணறு மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெருமாள் கோவில் சன்னதி சாலை, பெரிய பள்ளிவாசல் தென்பாதி சாலை, கீழையூர் அசிக்காடு சாலை விரைவில் ஒப்பந்தப்புள்ளி பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து வேலைகளும் செய்து விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கூறினார். அப்போது குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் முருகப்பா, ஒன்றியக்குழு உறுப்பினர் சலீமாபானு நசீர் அகமது, ஊராட்சி தலைவர்கள் வசந்திராஜாஜி, மோகன்ராஜ், பாலு, உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Related Tags :
Next Story