நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி


நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 19 Sep 2023 10:00 PM GMT (Updated: 19 Sep 2023 10:00 PM GMT)

ஐவர் கால்பந்து போட்டியில் நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் தமிழக கால்பந்து வீரர் மகேஷ் நினைவுக் கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு உள்ளன. ஒரு அணியில் தலா 5 வீரர்கள் மட்டுமே விளையாடும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் பேட்டலாடா அணியும், மேல் அனையட்டி அணியும் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய பேட்டலாடா அணி 4-1 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஊட்டி நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணியும், ஜக்கனாரை அணியும் விளையாடின. இதில் நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி 4-2 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டி ஊட்டி ஆர்.எம்.எப்.சி.-ஹில்ஸ் கிங் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஊட்டி ஆர்.எம்.எப்.சி. அணி 8-2 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற 3 அணிகளும் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.


Related Tags :
Next Story