மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 755 கனஅடியாக சரிவு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 755 கனஅடியாக சரிவு
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,022 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 883 கனஅடியாக குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 755 கன அடியாக சரிந்தது. கடும் வறட்சி காலமான, கோடை காலத்தில் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு கீழே சரியும். ஆனால், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்திலேயே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு கீழே சரிந்து உள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 107.79 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 107.20 அடியாக சரிந்துள்ளது.


Next Story