செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

* தேமுதிக தலைமை அலுவலகம் இனி 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார்.

* அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

* "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

* வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

* ஊழல் புகார் தொடர்பாக கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.

* நாட்டின் 90 சதவீத மக்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

* டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

* செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணியை ஆதரிக்க தயார் என மெகபூபா முப்தி அறிவித்தார்.

* முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story