செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.

* கிருஷ்ணகிரி பாலியல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழந்துள்ளார்.

* பிரபல தொழில் அதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

* பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை தொடங்குகிறது.

* ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களையும் வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்தது.

* சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

* லாசேன் டைமண்ட் லீக் தொடரில் 89.49 மீட்டர் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்தார்.

* 2026-ல்,தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

* விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story